பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி; ஆட்ட நாயகனாக கார்த்திக் தேர்வு

அரியாங்குப்பம்; தவளக்குப்பத்தில் நடந்து வரும் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், ஆட்ட நாயகனாக, ஸ்டைக்கர்ஸ் அணி வீரர், கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார்.

தவளக்குப்பம் பிரீமியர் லீக் கிரிகெட் சார்பில், அபிேஷகப்பாக்கம் சாலை, தனியார் டீத்துாள் கம்பெனி அருகே உள்ள திடலில், சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தொடர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. கடந்த 22ம் தேதி, காலையில் நடந்த போட்டியில். டைட்டன்ஸ் அணி, ஸ்டைக்கர்ஸ் அணியும் மோதின. இதில், 8 ரன்கள் வித்தியாசத்தில் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.

மதியம் நடந்த போட்டியில், பைட்டர்ஸ் அணி, சோல்ஜர்ஸ் அணியும் மோதின. இதில், 16 ரன்கள் வித்தியாசத்தில் பைட்டர்ஸ் அணி வெற்றி பெற்றது. மறுநாள் 23ம் தேதி, காலையில் நடந்த போட்டியில், டைட்டன்ஸ் அணி, பேட்டரி ஆர்ட்ஸ் அணியும் மோதின.

இதில், 3 விக்கெட் வித்தியாசத்தில் பேட்டரி ஆர்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.

மதியம் நடந்த போட்டியில், சோல்ஜர்ஸ் அணி, ஸ்பாட்டன்ஸ் அணியும் மோதின. இதில், 2 விக்கெட் வித்தியாசத்தில் சோல்ஜர்ஸ் அணி வெற்றி பெற்றது.

கடந்த வாரம் நடந்த போட்டியில், ஸ்டைக்கர்ஸ் அணியின் வீரர் கார்த்திக், ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இவர், 14 ரன்கள் மற்றும் 5 விக்கெட்கள் எடுத்தது குறிப்பிடதக்கது. இவ்வாறு, பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடத்தி வரும், ஒருங்கிணைப்பாளர் உதயா தெரிவித்துள்ளார்.

Advertisement