பாக்கம் கிராமத்தில் அ.தி.மு.க., நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கண்டமங்கலம்; கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய அதி.மு.க., சார்பில் ஜெ.வின் 77 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பாக்கம் கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

விழாவிற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார். சக்கரபாணி எம்.எல்.ஏ., பாக்கம் ஊராட்சி தலைவர் கல்யாணி வேலு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சாந்தி ராமச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கவுரி பாலக்கிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் நித்ய கல்யாணி ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவைத் தலைவர் ஏழுமலை வரவேற்றார்.

மாவட்ட செயலாளர் சண்முகம் ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

விழாவில் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்கள் வேலு, ஆறுமுகம், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வேல்முருகன், ஐ.டி பிரிவு மாவட்ட செயலாளர் கோகுல்ராஜ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சங்கர் (எ) சண்முகம், விவசாய அணி செயலாளர் குமரேசன், ஒன்றிய தொழில்நுட்ப அணி செயலாளர் சேதுபதி, ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பாலக்கிருஷ்ணன், இணை செயலாளர் துரை, மாவட்ட பேரவை இணை செயலாளர் சக்திவேல், துணை தலைவர் வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி சேகர், ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி சந்திரசேகர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முருகன், ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளர் சண்முகம், கிளை செயலாளர் முனியசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர்கள் அய்யனார், மதியழகன், மாவட்ட பாசறை துணை தலைவர் சுமன்ராஜ், ஒன்றிய பேரவை இணை செயலாளர் குமரன், மாவட்ட மாணவரணி தலைவர் மனோகர், மாவட்ட இலக்கிய அணி இணை செயலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மண்டகப்பட்டு கிளை செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.

Advertisement