காரைக்காலில் விளையாட்டை மேம்படுத்தும் திட்டப் பணிகள் அரசு செயலர் தலைமையில் ஆய்வு

காரைக்கால்; காரைக்காலில் விளையாட்டு மேம்பாட்டு பணிகள் மற்றும் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்துவது குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை செயலர் சுந்தரேசன் தலைமை தாங்கினார். கலெக்டர் சோமசேகர் அப்பாராவ் முன்னிலை வகித்தார்.
அப்போது, சமூக நலத்துறை சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மையம் அமைப்பதற்கான இடம் மற்றும் புறவழி சாலையில் உள்ள திறந்தவெளி விளையாட்டு மைதானம் மற்றும் உள்விளையாட்டு மைதானங்கள், விளையாட்டு சாதனங்கள், அதற்கான வசதிகள் மற்றும் மாநில, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்போருக்கான அடிப்படை வசதிகள், உடற்பயிற்சி அறைகள் மற்றும் இதர விளையாட்டு தேவைகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
உள் விளையாட்டு அரங்கில், சேதமடைந்து காணப்படும் மேற்கூரைகள், மின் விளக்குகள் மற்றும் குளிர்சாதன வசதிகளை, கேலோ இந்தியா திட்டம் மற்றும் மத்திய அரசின் விளையாட்டு துறை திட்டங்கள் மூலம் அமைப்பதற்கு, கோப்புகளை தயார் செய்யுமாறு அதிகாரிகளுக்கு, சுந்தரேசன் உத்தரவிட்டார்.
விளையாட்டு மைதானத்தில் சோலார் மின் உற்பத்தி மேற்கொள்ள வேண்டும், கடற்கரையில் சுற்றுலா மற்றும் பொதுமக்களை கவரும் வகையில் ஸ்கேட்டிங் விளையாட்டுக்கு முக்கியத்துவம் குறித்தும் ஆலோனை மேற்கொள்ளப்பட்டது.
பட்டினச்சேரியில் உள்ள நிலத்தில், இளைஞர்களின் கிரிக்கெட் பயிற்சியை மேம்படுத்த, பயிற்சியுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.
திருப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா சி.எஸ்.ஆர்., நிதியில் ரூ.2.25 கோடியில் கட்டப்பட்டு வரும் உள்விளையாட்டு அரங்கம் பணிகளையும் செயலர் சுந்தரேசன், கலெக்டர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனார்.
மேலும்
-
குழந்தைகளிடம் வன்முறையை விதைக்கும் ஆயுதங்களின் வடிவிலான எழுது பொருட்கள்
-
தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கழுகு கணக்கெடுப்பு துவக்கம்
-
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி துவங்கியது; பல்வேறு மாநில கலைஞர்கள் பங்கேற்பு
-
வேனில் கஞ்சா கடத்தல்; திருநாவலுாரில் 5 பேர் கைது
-
தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் உடைப்பு; வாகனங்கள் குறுக்கிடுவதால் விபத்து அபாயம்
-
சுவையான அவல் போண்டா