கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

திருக்கோவிலுார், ; திருக்கோவிலுார், டி.கே.டி திறந்த வெளி அரங்கில், முகையூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., மாவட்ட மாணவர் அணி சார்பில், ஜெ., பிறந்த நாள் விழா கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில், 40க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
நகர செயலாளர் சுப்பு வரவேற்றார். எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைச்செயலாளர் விநாயகமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன், தனபால்ராஜ், பழனி, சேகர், சந்தோஷ், நகர செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் குமரகுரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.
முதலிடம் பிடித்த சைலோம் சி.எஸ்.கே., அணிக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி ரூ. 15 ஆயிரம், 2ம் பிடித்த ஐ.எம்.சி., கிளப் அணிக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் பாக்யராஜ், ரூ.10 ஆயிரம், 3ம் இடம் பிடித்த அரகண்டநல்லூரைச் சேர்ந்த எஸ்.சி.சி., அணிக்கு மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன் ரூ.7 ஆயிரம், 4ம் இடம் பெற்ற, சந்தப்பேட்டை, பாய்ஸ் அணிக்கு மாவட்ட மாணவர் அணி தலைவர் பார்த்திபன், ரூ. 2 ஆயிரம் பரிசாக வழங்கினர்.
மேலும்
-
இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்: மயிலாடுதுறையில் அதிர்ச்சி
-
மதுராந்தகம் ஏரி புனரமைப்பு; ரூ. 2,172 கோடியில் பணி மும்முரம்!
-
சினிமாவில் காலாவதியான பிறகு அரசியலுக்கு வருகிறார்கள்: யாரைச் சொல்கிறார் திருமாவளவன்?
-
ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை; இன்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ.320 சரிவு
-
குழந்தைகளிடம் வன்முறையை விதைக்கும் ஆயுதங்களின் வடிவிலான எழுது பொருட்கள்
-
தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கழுகு கணக்கெடுப்பு துவக்கம்