மாருதி சியாஸ் இனி விற்பனை ஆகாது!
'மாருதி சுசூகி' நிறுவனம், அதன் கார் அணிவகுப்பில் இருந்து, 'சியாஸ்' மிட்சைஸ் செடான் காரை அகற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும், மார்ச் மாதத்திற்குள், இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டு, ஏப்ரலில் விற்பனை முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
இந்தியாவில், எஸ்.யூ.வி., கார்களின் விற்பனை அதிகரிப்பதால், செடான் கார்களின் விற்பனை சரிந்து வருகிறது. கடந்த 2015ல், கார் சந்தையில் 20 சதவீதம் பங்கு வைத்து இருந்த செடான் பிரிவு, தற்போது, 10 சதவீதத்திற்கு கீழ் குறைந்துள்ளது. மிட்சைஸ் செடான் பிரிவில், 'ஹோண்டா சிட்டி', 'ஹூண்டாய் வெர்னா', 'ஸ்கோடா ஸ்லாவியா' மற்றும் 'போக்ஸ்வேகன் விர்டுஸ்' ஆகிய கார்களின் போட்டி அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி, 2024 நிதியாண்டுடன் ஒப்பிடும் போது, 2025 நிதியாண்டின் முதல் 9 மாதங்களில், சியாஸ் காரின் விற்பனை, 34 சதவீதம் குறைந்து, 5,861 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2018க்குப் பிறகு, மாருதி நிறுவனம், சியாஸ் காரை மேம்படுத்தவில்லை.
அதாவது, டிஜிட்டல் டிஸ்ப்ளே, சன் ரூப், அடாஸ் வசதி உள்ளிட்ட எந்த அம்சமுமின்றி சந்தையில் காணப்படுகிறது. போதுமான இன்ஜின் வாய்ப்பும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவில்லை. 2019க்குப் பிறகு, 1.5 லிட்டர், என்.ஏ., பெட்ரோல் இன்ஜினில் மட்டுமே இந்த கார் வருகிறது. போதிய காரணங்களால், சியாஸ் காரின் உற்பத்தி, நிறுத்தப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
மேலும்
-
இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்: மயிலாடுதுறையில் அதிர்ச்சி
-
மதுராந்தகம் ஏரி புனரமைப்பு; ரூ. 2,172 கோடியில் பணி மும்முரம்!
-
சினிமாவில் காலாவதியான பிறகு அரசியலுக்கு வருகிறார்கள்: யாரைச் சொல்கிறார் திருமாவளவன்?
-
ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை; இன்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ.320 சரிவு
-
குழந்தைகளிடம் வன்முறையை விதைக்கும் ஆயுதங்களின் வடிவிலான எழுது பொருட்கள்
-
தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கழுகு கணக்கெடுப்பு துவக்கம்