லேண்ட்க்ரூசர் 300 டொயோட்டா 'ஆப்ரோட் டேங்க்'

'டொயோட்டா' நிறுவனம், 'லேண்ட்க்ரூசர் 300' 2025 மாடல் எஸ்.யூ.வி., காரை அறிமுகப்படுத்தி உள்ளது. இம்முறை இந்த காரின் விலை, 21 லட்சம் ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இது, 'இசட்.எக்ஸ்.,' மற்றும் 'ஜி.ஆர்., - எஸ்' என்று இரு வகையில் வந்துள்ளது. ஜி.ஆர்., - எஸ்., வகை கார், ஆப்ரோட் பயன்பாட்டுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பழைய லேண்ட்க்ரூசர் காருடன் ஒப்பிடும் போது, இந்த காரில், கூடுதல் பாதுகாப்பு மற்றும் அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, 4 ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், 12.3 அங்குல டச் ஸ்கிரீன், சன் ரூப், முன்புற மற்றும் பின்புற வென்ட்டிலேட்டட் மற்றும் எலக்ட்ரானிக் சீட்டுகள் உள்ளிட்டவை இசட்.எக்ஸ்., வகை காரில் வழங்கப்பட்டுள்ளன.
கூடுதலாக, ஆப்ரோடிங் செய்ய முன்புற மற்றும் பின்புற டிப்ரன்ஷியல் லாக்குகள், க்ரால் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் மற்றும் டிசென்ட், டெரைன் மோடுகள், 4 ஆப்ரோட் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு, ஆக்டிவ் டிராக் ஷன் கன்ட்ரோல் ஆகியவை ஜி.ஆர்., - எஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன. இரு வகை கார்களிலும், 10 பாதுகாப்பு பைகள் மற்றும் அடாஸ் லெவல் 2 அமைப்பு வந்துள்ளன.
இன்ஜின், 4 வீல் டிரைவ் அமைப்பு மற்றும் டிசைன் பொறுத்தவரை, எந்த பெரிய மாற்றமும் இல்லை என்றாலும், ஜி.ஆர்., - எஸ் வகை காரில் மட்டும், டொயோட்டா பெயர் அடையாளம் பொறிக்கப்பட்ட, தேன்கூட்டு கிரில் மற்றும் கருப்பு அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுஉள்ளன.
இன்ஜின் - 3.3 லிட்டர், வி6, டுவின் டர்போ, டீசல்
பவர் - 309 ஹெச்.பி.,
டார்க் - 700 என்.எம்.,
மேலும்
-
இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்: மயிலாடுதுறையில் அதிர்ச்சி
-
மதுராந்தகம் ஏரி புனரமைப்பு; ரூ. 2,172 கோடியில் பணி மும்முரம்!
-
சினிமாவில் காலாவதியான பிறகு அரசியலுக்கு வருகிறார்கள்: யாரைச் சொல்கிறார் திருமாவளவன்?
-
ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை; இன்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ.320 சரிவு
-
குழந்தைகளிடம் வன்முறையை விதைக்கும் ஆயுதங்களின் வடிவிலான எழுது பொருட்கள்
-
தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கழுகு கணக்கெடுப்பு துவக்கம்