நட்சத்திர வெடிப்பால் மாற்றமடைந்த வைரஸ்

நம் பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. அவற்றின் ஆயுள் முடியும்போது அவை வெடித்துச் சிதறும். இந்தப் பெரு வெடிப்பை 'சூப்பர் நோவா' என்று அழைப்பார்கள். நம்முடைய சூரிய மண்டலத்துக்கு அருகே இந்த சூப்பர் நோவா நடக்கும்போது அதன் தாக்கம் பூமியிலும் இருக்கும். பூமியில் பல மாற்றங்கள் நிகழ்ந்ததற்கு இந்த சூப்பர் நோவாவும் காரணம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
நட்சத்திரங்கள் வெடிப்பின் போது, பலவிதமான கதிரியக்கங்கள் பிரபஞ்சம் முழுதும் பரவும். அவை பூமியையும் தாக்கும்.
எப்படிச் சூரியனிலிருந்து வருகின்ற சூரியப் புயல் பூமியில் பாதிப்பை ஏற்படுத்துகிறதோ, அதுபோலவே இந்தக் கதிர் இயக்கங்களும் பூமியில் உள்ள உயிரினங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 65 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக இப்படி நடந்த ஒரு நட்சத்திர வெடிப்பின் போது கதிரியக்க இரும்பு பூமியை வந்து அடைந்தது.
ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த ஒரு நட்சத்திர வெடிப்பால் ஏராளமான காஸ்மிக் கதிர்கள் பூமியை வந்தடைந்துள்ளன.
இந்த கதிரியக்கம் மிகவும் ஆபத்தானது. உயிரினங்களுடைய மரபணுவில் மாற்றத்தை உருவாக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக பூமியில் இருந்து 457 ஒளி ஆண்டுகள் தொலைவில் சில நட்சத்திரங்கள் வெடித்துள்ளன.
இதே காலகட்டத்தில் ஆப்ரிக்காவில் சில ஏரிகளில் வாழ்ந்த வைரஸ்களில் வித்தியாசமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தக் கதிரியக்கத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவே வைரஸ்கள் இவ்வாறு தங்களை மாற்றிக் கொண்டுள்ளன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
மேலும்
-
டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; 12 மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு கடிதம்
-
தமிழ் விழித்தது; தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது: முதல்வர் ஸ்டாலின் பதிவு
-
மருத்துவமனையில் அமைச்சர் ராமசந்திரன் அனுமதி
-
ஆடையை களைந்த போலீஸ்காரர் ஸ்டேஷனில் ரகளை; பெண் போலீசார் ஓட்டம்!
-
இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்: மயிலாடுதுறையில் அதிர்ச்சி
-
மதுராந்தகம் ஏரி புனரமைப்பு; ரூ. 2,172 கோடியில் பணி மும்முரம்!