சுவையான அவல் போண்டா

தினமும் ஒரே விதமான சிற்றுண்டி சாப்பிட்டு கடுப்பாக இருக்கிறதா. வித்தியாசமாக ஏதாவது சாப்பிட வேண்டும் என, தோன்றுகிறதா. 'அவல் போண்டா' டிரை செய்யுங்கள்.
தேவையான பொருட்கள்
அவல் - ஒன்றரை கப்
உருளைகிழங்கு - 3
பச்சை மிளகாய் - 2
கொத்துமல்லி - ஒரு கைப்பிடி
மிளகாய் துாள் - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
சர்க்கரை - அரை ஸ்பூன்
எலுமிச்சை ரசம் - 1 ஸ்பூன்
எண்ணெய் - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் அவலை சுத்தம் செய்து, சிறிது நேரம் நீரில் நனைத்து வையுங்கள். உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து, நன்றாக மசித்துக் கொள்ளவும். இதில் நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, அவலை போடுங்கள்.
இதில் மிளகாய் துாள், சீரகம், சர்க்கரை, உப்பு போட்டு, நன்றாக பிசைந்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, சூடானதும், மாவை பக்கோடா வடிவிலோ அல்லது போண்டா வடிவிலோ எண்ணெயில் போடவும். பொன்னிறமானதும் எடுக்கவும். சூடாக புதினா சட்னியுடன் சாப்பிட்டால், சுவை அள்ளும்.
மேலும்
-
மத நல்லிணக்கத்தின் அடையாளம் பீதரில் உள்ள 'ரஞ்சின் மஹால்'
-
துன்பத்தை மறந்து... இன்பத்தை ரசிக்கணுமா? நீங்கள் செல்ல வேண்டிய இடம் ஹொன்னாவர்!
-
ஹைட்ரோ கார்பன் திட்ட ஏல அறிவிப்பை வாபஸ் பெறுங்கள்: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
-
நீர் நிலைகளுக்கு படையெடுக்கும் மக்கள்
-
பரந்தூரை தேர்வு செய்தது மாநில அரசு தான்: மத்திய அமைச்சர் தகவல்
-
மனதை இழுக்கும் ஹிடகல் பறவைகள் சரணாலயம்