வேனில் கஞ்சா கடத்தல்; திருநாவலுாரில் 5 பேர் கைது

உளுந்துார்பேட்டை; திருநாவலுார் அருகே மினி வேனில் 2.5 கிலோ கஞ்சா கடத்திய கேரள வாலிபர்கள் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்..
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலுார் இன்ஸ்பெக்டர் இளையராஜா, சப் இன்ஸ்பெக்டர் லோகேஷ் மற்றும் போலீசார் நேற்று காலை 9:00 மணிக்கு கூ.நத்தம் அருகே வாகன சோதனை நடத்தினர்.
அவ்வழியே வந்த கேரள மாநில பதிவெண் கொண்ட மினி சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 2.5 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
டெம்போவில் இருந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கேரள மாநிலம் கோழிக்கோடு அடுத்த கக்கோடி கிராமத்தை சேர்ந்த ஷாஜி, 47; கிஷன் நந்து,37; உளுந்தூர்பேட்டை தாலுகா கூ. நத்தம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ்,29; திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தை சேர்ந்த ராமச்சந்திரன்,35; விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த தாயனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜிவ்காந்தி,35; என்பதும், இவர்கள் கேரளாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து உளுந்துார்பேட்டை பகுதிகளில் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.
அதன்பேரில் திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து, ஷாஜி உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர். மேலும், கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய மினி வேன் மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும்
-
மத நல்லிணக்கத்தின் அடையாளம் பீதரில் உள்ள 'ரஞ்சின் மஹால்'
-
துன்பத்தை மறந்து... இன்பத்தை ரசிக்கணுமா? நீங்கள் செல்ல வேண்டிய இடம் ஹொன்னாவர்!
-
ஹைட்ரோ கார்பன் திட்ட ஏல அறிவிப்பை வாபஸ் பெறுங்கள்: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
-
நீர் நிலைகளுக்கு படையெடுக்கும் மக்கள்
-
பரந்தூரை தேர்வு செய்தது மாநில அரசு தான்: மத்திய அமைச்சர் தகவல்
-
மனதை இழுக்கும் ஹிடகல் பறவைகள் சரணாலயம்