ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை; இன்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ.320 சரிவு

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்த நிலையில், இன்றும் (பிப்.,27) சவரனுக்கு ரூ.320 சரிந்துள்ளது. ஒரு சவரன் ரூ.64,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்ந்து வந்தது. பிப்.,, 24ம் தேதி 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 8,055 ரூபாய்க்கும், சவரன், 64,440 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராம், 108 ரூபாய்க்கு விற்பனையானது. பிப்.,25ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு, 20 ரூபாய் உயர்ந்து, 8,075 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 160 ரூபாய் அதிகரித்து, 64,600 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று (பிப்.,26) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு சவரன் ரூ.64,400க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (பிப்.,27) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்த நிலையில், இன்றும் (பிப்.,27) சவரனுக்கு ரூ.320 சரிந்துள்ளது.
ஒரு சவரன் ரூ.64,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிராம் ரூ.8,010க்கு விற்பனை ஆகிறது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று சற்று விலை குறைந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மேலும்
-
மத நல்லிணக்கத்தின் அடையாளம் பீதரில் உள்ள 'ரஞ்சின் மஹால்'
-
துன்பத்தை மறந்து... இன்பத்தை ரசிக்கணுமா? நீங்கள் செல்ல வேண்டிய இடம் ஹொன்னாவர்!
-
ஹைட்ரோ கார்பன் திட்ட ஏல அறிவிப்பை வாபஸ் பெறுங்கள்: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
-
நீர் நிலைகளுக்கு படையெடுக்கும் மக்கள்
-
பரந்தூரை தேர்வு செய்தது மாநில அரசு தான்: மத்திய அமைச்சர் தகவல்
-
மனதை இழுக்கும் ஹிடகல் பறவைகள் சரணாலயம்