சினிமாவில் காலாவதியான பிறகு அரசியலுக்கு வருகிறார்கள்: யாரைச் சொல்கிறார் திருமாவளவன்?

தர்மபுரி: 'சினிமாவில் காலாவதியான பிறகு அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள்' என வி.சி.க., தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூரில் நடந்த கட்சி கூட்டத்தில், திருமாவளவன் பேசியதாவது: ஒரு மாநில கட்சி என்று அங்கீகாரம் பெறுவதற்கே, 35 ஆண்டுகள் பெரும்பாடு பட நேர்ந்தது.
சில பேர், 50, 60 வயசு வரை சினிமாவில் நடித்து பொருளை தேடி, சுகத்தை தேடி, சொகுசாக வாழ்ந்து விட்டு, இளமை காலத்தை எல்லாம் சொகுசாக கழித்துவிட்டு, தேவையான அளவிற்கு சொத்து சேர்த்து வைத்து கொண்டுவிட்டு, காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள்.
அவர் ஊரு ஊராக இப்படி போய் அலைய வேண்டியது இல்லை. ஊரு ஊராக போய் கொடி ஏற்று வேண்டியது இல்லை. ஊரு ஊராக போய் மக்களை சந்தித்து பேச வேண்டியது இல்லை. உடனே கட்சியை துவங்கலாம்; அடுத்து ஆட்சிக்கு போகலாம். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
யார் பெயரையும் குறிப்பிடாமல், திருமாவளவன் மறைமுகமாக விமர்சித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாகி உள்ளது. அதேநேரத்தில், யாரை அவர் சொல்கிறார் என்ற கேள்வியும் எழ துவங்கி உள்ளது.












மேலும்
-
மத நல்லிணக்கத்தின் அடையாளம் பீதரில் உள்ள 'ரஞ்சின் மஹால்'
-
துன்பத்தை மறந்து... இன்பத்தை ரசிக்கணுமா? நீங்கள் செல்ல வேண்டிய இடம் ஹொன்னாவர்!
-
ஹைட்ரோ கார்பன் திட்ட ஏல அறிவிப்பை வாபஸ் பெறுங்கள்: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
-
நீர் நிலைகளுக்கு படையெடுக்கும் மக்கள்
-
பரந்தூரை தேர்வு செய்தது மாநில அரசு தான்: மத்திய அமைச்சர் தகவல்
-
மனதை இழுக்கும் ஹிடகல் பறவைகள் சரணாலயம்