பரந்தூரை தேர்வு செய்தது மாநில அரசு தான்: மத்திய அமைச்சர் தகவல்

9


சென்னை: 'விமான நிலையம் அமைக்க பரந்தூரை தேர்வு செய்தது மாநில அரசு தான்' என சென்னை விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது: சென்னை விமான நிலையத்தை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறப்பான சேவையை வழங்கி வரும் சென்னை விமான நிலையம் தனியார் மையம் ஆக்கப்படாது. எனவே இதை அரசே வழி நடத்த முடிவு செய்துள்ளது.



பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக அடுத்த வாரம் டில்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். விமான நிலையத்திற்கு பரந்தூரை தேர்வு செய்ததும் மாநில அரசுதான். பரந்தூர் விமான நிலையம் இடத் தேர்வில் மத்திய அரசுக்கு தொடர்பு இல்லை. மாநில அரசு தேர்ந்தெடுக்கும் இடத்தில் நாங்கள் பணியை தொடங்குவோம்.


பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ளது. இட தேர்வு முடிந்துவிட்டது. பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக பிற விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கோவை விமான நிலையம் அதிக பயணிகளை கையாளுவதால் அதையும் விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு ராம்மோகன் நாயுடு கூறினார்.

Advertisement