மத நல்லிணக்கத்தின் அடையாளம் பீதரில் உள்ள 'ரஞ்சின் மஹால்'

பீதரில் மத நல்லிணக்கத்தில் கட்டப்பட்ட மஹாலை பார்த்திருக்கிறீர்களா? இந்த மஹால், பிரமாண்ட பீதர் கோட்டைக்குள் கும்பாத் நுழைவு வாயில் அருகில் அமைந்து உள்ளது.

அலி பத்ரித் ஷா ஆட்சி செய்த 1542 - 1580களில், 'ரஞ்சின் மஹால்' கட்டப்பட்டது. பாரசீக கவிதையில், புரவலராக இருந்த அலி பத்ரித் ஷா, இந்த பெயரை சூட்டினார். இதற்கு, 'வண்ணங்களின் அரண்மனை' என்று அர்த்தம்.
Latest Tamil News
இந்த மஹாலில் அழகிய வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்ட மர சிற்பங்கள், சிறு சிறு டைல்ஸ் துண்டுகளால் உருவாக்கப்பட்ட ஓவியங்கள், அனைவரையும் கவர்ந்து இழுக்கிறது.

இதை பார்க்கும் போது, பீதர் அரச குடும்பத்தின் வளத்தை பறைசாற்றுகிறது. ரஞ்சின் மஹால் வடிவமைப்பு, ஹிந்து - முஸ்லிம் நல்லிணக்கின் அடையாளமாக, விளங்குகிறது.
Latest Tamil News
மரத்தினால் செய்யப்பட்ட வேலைப்பாடுகள், ஹிந்து கோவில்களில் செதுக்கப்படும் கலைகள் போன்று உள்ளது. மஹாலின் வடிவமைப்பு ஹிந்து மற்றும் முஸ்லிம் கட்டட கலையின் கலவையை குறிக்கிறது.
Latest Tamil News
இந்த மஹால், இரண்டு தளங்கள் கொண்டாகும். ஒவ்வொரு தளத்திலும் ஒரு அரங்கு, பல அறைகள் கட்டப்பட்டு உள்ளன. மஹால் உட்புறத்தின் சுவர்களில் சிறு சிறு வண்ண டைல்ஸ் ஓடுகள் பதிக்கப்பட்டு உள்ளன. அதுபோன்று ஒவ்வொரு அறைக்கும் இதேபோன்று டைல்ஸ்கள் பதிக்கப்பட்டு உள்ளன. அத்துடன் நுழைவு வாயிலின் மேல்புறத்தில் குரான் வசனங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன.
Latest Tamil News
இந்த மஹாலை, 'ராணியின் அரண்மனை' என்றும் அழைக்கின்றனர். மஹாலில் ராணிக்கு பணிவிடை செய்பவர்கள், பாதுகாப்பில் ஈடுபடும் வீரர்கள் தங்குவதற்காக, அறைகளும் கட்டப்பட்டு உள்ளன.


எப்படி செல்வது?



பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்வோர், பீதர் விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 5.2 கி.மீ., தொலைவில் உள்ள ரஞ்சன் மஹாலுக்கு செல்லலாம்.

ரயிலில் செல்வோர், பீதர் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 2.2 கி.மீ., தொலைவில் உள்ள ரஞ்சன் மஹாலுக்கு செல்லலாம்.

பஸ்சில் செல்வோர், பீதர் பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 2.2 கி.மீ., தொலைவில் உள்ள ரஞ்சன் மஹாலுக்கு செல்லலாம்.

Advertisement