6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; அரசுப் பள்ளி ஆசிரியர் கைது

28


அரியலூர்: அரியலூரில் 6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கைது செய்யப்பட்டார்.


தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே, வேலியே பயிரை மேய்ந்த கதையாக, ஆசிரியர்களினால் பள்ளி, கல்லூரி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் அடுத்தது அரங்கேறி வருகிறது.


தற்போது அரியலூரிலும் அதே மாதிரியான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அரியலூரில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு மாணவிக்கு தமிழ் ஆசிரியர் சுரேஷ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மாணவியை மிரட்டியுள்ளார்.


இதனால், பயந்து போன மாணவி இது சம்பந்தமாக பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீஸில் புகார் அளித்தனர். அதன்பேரில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சுரேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Advertisement