தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் நாளை (பிப்.,28) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மார்ச் 1ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்
-
நடிகை வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவிற்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் சீமான் மேல்முறையீடு
-
அறியாமையால் புகார் கூறும் சாம் பிட்ரோடா: கல்வி அமைச்சகம் கண்டனம்!
-
தஹாவூர் ராணாவிடம் டில்லியில் விசாரிக்க முடிவு!
-
பீஹாரால் இந்தியா வளரவில்லை: சர்ச்சைக்குள்ளான பதிவால் கேந்திர வித்யாலயா பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்
-
ஹிந்தி கற்றால் இப்படி ஒரு லாபம் இருக்கே!! யோசி தமிழா, யோசி!!
-
மழையால் போட்டி ரத்து