மழையால் போட்டி ரத்து

ராவல்பிண்டி: பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டி மழையால் ரத்தானது.
பாகிஸ்தான், துபாயில், ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி 9வது சீசன் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள், இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 'ஏ' பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இன்று ராவல்பிண்டியில் நடக்க இருந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில், ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோத இருந்தன. ஆனால் கனமழை காரணமாக 'டாஸ்' கூட போடாத நிலையில் போட்டியை ரத்து செய்வதாக அம்பயர்கள் அறிவித்தனர். இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி (1 புள்ளி), 'ஏ' பிரிவில் 4வது இடம் பிடித்தது. வங்கதேசம் (1 புள்ளி) 3வது இடத்தை கைப்பற்றியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிராகு செஸ்: பிரக்ஞானந்தா 'டிரா'
-
மொனாகோ செஸ்: ஹம்பி 'டிரா'
-
லிவர்பூல் அணி அபாரம்: பிரிமியர் லீக் கால்பந்தில்
-
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: முதல்வர் ஸ்டாலின்
-
கேரள வனத்துறையின் அதிகாரபூர்வ பாடல் 'வனநீரு' வெளியீடு!
-
சவுதி அரேபியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி தங்கம் டில்லியில் பறிமுதல்!
Advertisement
Advertisement