சவுதி அரேபியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி தங்கம் டில்லியில் பறிமுதல்!

5


புதுடில்லி: டில்லி விமான நிலையத்தில் ரூ.1.3 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சவுதி அரேபியாவில் இருந்து வந்தவர் கைது செய்யப்பட்டார்.


சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து குவைத் வழியாக டில்லி வந்த விமானத்தில் பயணித்த நபரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர்.


எக்ஸ்ரே சோதனையில் எதுவம் தெரியாத நிலையில், அவரிடம் நேரடியாக அதிகாரிகளை சோதனையில் ஈடுபட்டனர். அதில், தங்கத்தை உருக்கி அவர் கடத்தி வந்தது உள்ளாடையிலும், பையின் அடியில் வைத்தும் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.


அவரும் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவரிடம் இருந்து 1,585 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.1.3 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். அவரை கைது செய்த அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement