லிவர்பூல் அணி அபாரம்: பிரிமியர் லீக் கால்பந்தில்

லிவர்பூல்: பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணி 2-0 என நியூகேசில் அணியை வீழ்த்தியது.

இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கால்பந்த தொடர் நடக்கிறது. லிவர்பூல் நகரில் நடந்த லீக் போட்டியில் லிவர்பூல், நியூகேசில் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய லிவர்பூல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. லிவர்பூல் சார்பில் டொமினிக் சோபோஸ்லாய் (11வது நிமிடம்), அலெக்சிஸ் மேக் அலைஸ்டர் (63வது) தலா ஒரு கோல் அடித்தனர். இது, இம்முறை லிவர்பூல் அணியின் 20வது வெற்றியானது.

மற்றொரு போட்டியில் மான்செஸ்டர் சிட்டி, டாட்டன்ஹாம் அணிகள் மோதின. இதில் மான்செஸ்டர் சிட்டி அணி 1-0 என வெற்றி பெற்றது. மான்செஸ்டர் யுனைடெட் அணி 3-2 என இப்ஸ்விச் அணியை வீழ்த்தியது. எவர்டன், பிரென்ட்போர்ட் அணிகள் மோதிய லீக் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. ஆர்சனல், நாட்டிங்காம் பாரஸ்ட் அணிகள் மோதிய போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா'வில் முடிந்தது.
இதுவரை விளையாடிய 28 போட்டியில், 20 வெற்றி, 7 'டிரா', ஒரு தோல்வி என 67 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்த நான்கு இடங்களில் ஆர்சனல் (54 புள்ளி), நாட்டிங்காம் பாரஸ்ட் (48), மான்செஸ்டர் சிட்டி (47), நியூகேசில் (46) அணிகள் உள்ளன.

Advertisement