மொனாகோ செஸ்: ஹம்பி 'டிரா'

புதுடில்லி: மொனாகோ ஓபன் செஸ் 8வது சுற்றுப் போட்டியை இந்தியாவின் ஹம்பி 'டிரா' செய்தார்.
மொனாக்கோவில், பெண்களுக்கான கிராண்ட் பிரிக்ஸ் செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் கொனேரு ஹம்பி, ஹரிகா உட்பட மொத்தம் 10 பேர் பங்கேற்கின்றனர். இதன் 8வது சுற்றில் இந்தியாவின் ஹம்பி, ரஷ்யாவின் கேத்ரினா லாக்னோ மோதினர். இதில் ஹம்பி, கறுப்பு நிற காய்களுடன் விளையாடினார். இப்போட்டி 21வது நகர்த்தலின் போது 'டிரா' ஆனது.


மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஹரிகா, சுவிட்சர்லாந்தின் அலெக்சாண்ட்ரா கோஸ்டெனியுக் மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் சாமர்த்தியமாக விளையாடிய ஹரிகா, 44வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.
எட்டு சுற்றுகளின் முடிவில் ரஷ்யாவின் கேத்ரினா லாக்னோ, மங்கோலியாவின் பட்குயாக் முன்குந்துால், ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா கோரியாச்கினா தலா 5.0 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். சீனாவின் ஜோங்கி டான், ஹம்பி தலா 4.5 புள்ளிகளுடன் 4வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். சுவிட்சர்லாந்தின் கோஸ்டெனியுக், ஹரிகா தலா 3.5 புள்ளிகளுடன் 6வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

Advertisement