ராம்குமார்-மைனேனி அசத்தல்

பெங்களூரு: பெங்களூரு ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு இந்தியாவின் ராம்குமார், மைனேனி ஜோடி முன்னேறியது.
பெங்களூருவில், ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சாகேத் மைனேனி ஜோடி, செக்குடியரசின் பார்டன், உக்ரைனின் எரிக் வான்ஷெல்போய்ம் ஜோடியை சந்தித்தது. ராம்குமார், மைனேனி ஜோடி 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.


மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் சித்தாந்த் பந்தியா, பரிக் ஷித் சோமனி ஜோடி 7-5, 6-0 என கொலம்பியாவின் நிக்கோலஸ் மெஜியா, ஆஸ்திரேலியாவின் பெர்னார்ட் டோமிக் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் அடில் கல்யாண்பூர், கரண் சிங் ஜோடி 2-6, 4-6 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் பிளேக் பேல்டன், மாத்யூ கிறிஸ்டோபர் ரோமியோஸ் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

Advertisement