டில்லியில் டியூசன் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: 3 ஆண்டாக பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் கைது

7


புதுடில்லி: டில்லியில் 15 வயது சிறுமியை 3 ஆண்டாக பாலியல் வன்கொடுமை செய்ததுடன், வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டிய டியூசன் ஆசிரியரை, போலீசார் கைது செய்தனர்.


டில்லியின் தெற்கு பகுதியில் சிஆர் பூங்கா பகுதியில் வசிக்கும் ஆசிரியர் ஒருவர் டியூசன் எடுத்து வந்துள்ளார். இவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். இவரிடம் சிறுமி ஒருவர் டியூசன் படித்து வந்தார். கடந்த 2022ம் ஆண்டு முதல் சிறுமியை அந்த ஆசிரியர் மன ரீதியாக துன்புறுத்தியதுடன், டியூசன் மையத்திலேயே பல முறை பாலியல் வன் கொடுமை செய்துள்ளார். இதனை வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்து போன அந்த சிறுமி விஷயத்தை வெளியில் யாரிடமும் சொல்லவில்லை.

தற்போது 15 வயதாகும் அந்த சிறுமி தந்தையுடன் வந்து போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த டியூசன் ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement