சீமான் வீட்டில் அதிரடி காட்டிய இன்ஸ்பெக்டர் பின்னணி இதுதான்!

9


சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் புகுந்து இருவரை கைது செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷ் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேசனில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக வேண்டும் என போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், சீமான் ஆஜராகாத காரணத்தினால், அவரது வீட்டு கதவில் போலீசார் சம்மனை இன்று (பிப்.,27) ஒட்டினர். அந்த சம்மனை, அங்கிருந்த காவலாளி கிழித்தார். இதனால், அங்கு போலீசாருக்கும், காவலாளிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்த நீலாங்கரை இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷ் தலைமையிலான போலீசார், அங்கு வந்து அமல்ராஜ் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர்.


கதவை திறந்து கொண்டு இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்தபோது, பாதுகாவலர் தடுத்தது, அவரை மடக்கி இழுத்து வெளியே கொண்டு வந்து ஜீப்பில் ஏற்றியது, சீமான் மனைவி கயல்விழி நேரடியாக வந்து மன்னிப்பு கேட்டது உள்ளிட்ட சம்பவங்களால் அந்தப் பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது.இது குறித்த வீடியோ காட்சிகள் இன்று இணையத்தில் வைரலாக பரவின.

இந்நிலையில், குறிப்பிட்ட அந்த இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷ் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பிரவின் ராஜேஷின் தந்தை ராஜகுரு. இவரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவார். இவர், முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட போது உயிரிழந்தவர்களில் ஒருவர்.

அப்போது, பிரவின் ராஜேஷின் வயது 16. தந்தை மரணத்தை பார்த்ததும், நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் போலீஸ் வேலைக்கு வந்தார். இவரது தாயார், ராஜிவ் கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை விடுதலை செய்யக்கூடாது என சட்டப்போராட்டம் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement