பெயரில் மட்டுமா தங்கம்; உள்ளமும் தான் தங்கம்!

தென்காசி: புளியங்குடியில் ரோட்டில் கிடந்த பையில் இருந்த ரூ 5 லட்சத்தை விவசாய தம்பதி, உரியவரிடம் ஒப்படைத்ததை போலீசார் பாராட்டினர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி புதுக்குடியை சேர்ந்தவர் தங்கசாமி 50. விவசாயி. மனைவி ஜோதி. இருவரும் விவசாய பணிக்கு செல்லும் போது ரோட்டில் ஒரு மஞ்சள் துணிப்பை கிடந்தது. அதில் ரூ 5 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது. பையை எடுத்துப் பார்த்த தங்கசாமி அங்கிருந்தவர்களிடம் யாராவது தொலைத்து விட்டார்களா என விசாரித்தார். யாருமே உரிமை கொண்டாடாததால் புளியங்குடி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தரிடம் ஒப்படைத்தார்.
போலீஸ் விசாரணையில் புளியங்குடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த பாலமுருகன் 44, என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. அவர் அடகு நகைகளை மீட்க டூவீலரில் சென்றபோது தவற விட்டிருந்தார். எனவே போலீசார் பாலமுருகனை அழைத்து தங்கசாமி கையினாலேயே அதை ஒப்படைத்தனர். தங்கசாமி, ஜோதி தம்பதியை தென்காசி எஸ்.பி அரவிந்த் மற்றும் இன்ஸ்பெக்டர் ஷ்யாம் சுந்தர் பாராட்டினர்.




மேலும்
-
மத்திய, மாநில அரசுகளின் விவசாய திட்டங்களில் நம்பிக்கை இல்லை காங்., எம்.பி., கார்த்தி பேச்சு
-
பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்க எதிர்பார்ப்பு
-
அக்., மழையில் நெற்பயிர் பாதிப்பு நிவாரண அறிவிப்பின்றி அதிருப்தி
-
தாட்கோ டிராக்டருக்கு மானியம் வழங்குவதில்லை: விவசாயிகள் புகார்
-
சிறுவனிடம் அத்துமீறல்
-
மஹா ருத்ரேஸ்வரர் கோவிலில் லட்சதீப திருவிழா