பாரா வீரர்களுக்கு ஊக்கத்தொகை

சென்னை:தேசிய அளவில் நடந்த, பாரா தடகள மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டியில், பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் - வீராங்கனைகளுக்கு, உயரிய ஊக்கத்தொகையாக 2.52 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

சென்னை, பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில், நேற்று நடந்த விழாவில், தேசிய அளவில், கோவா மற்றும் சென்னையில் நடந்து முடிந்த, 22, 23வது பாரா தடகளப் போட்டி...

மத்தியப்பிரதேசத்தில் நடந்த போக்சியா தேசிய பாரா டேபிள் டென்னிஸ் போட்டி ஆகியவற்றில் பதக்கம் வென்ற 44 பாரா வீரர் - வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக, 2.52 கோடி ரூபாயை, துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.

அவர் பேசுகையில், ''தமிழக முதல்வர் துவங்கி வைத்த, தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை சார்பில், 41 மாற்றுத்திறனாளிகளுக்கு, 4.55 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இவர்கள் தேசிய மற்றும் சர்வதேச போட்டியில் பங்கேற்று, 113 பதக்கங்களை வென்றுள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில், 153 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு 19 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement