செபி அமைப்பின் தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்

துடில்லி: மத்திய அரசின் நிதித்துறை செயலராக இருந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி துஹின் காந்தா பாண்டே இந்தியப் பங்குப் பரிவர்த்தனை அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


மத்திய அமைச்சரவை செயலராக இருந்த ராஜிவ் கவுபா பணி நிறைவு பெற்றார். அப்பதவிக்கு நிதித்துறை செயலராக இருந்த டி.வி. சோமநாதன், மத்திய அமைச்சரவை செயலராக நியமிக்கப்பட்டார்.இதையடுத்து காலியாக இருந்த நிதித்துறை செயலர் பதவிக்கு துஹின் காந்தா பாண்டே நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் வெளியான அறிவிப்பில் இந்திய பங்கு பரிவர்த்தனை அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இப்பதவியில் மூன்று ஆண்டுகள் இருப்பார்.

கடந்த 1987 ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். கேரடரான துஹின் காந்தா பாண்டே, முதலீடு மற்றும் பொதுத்துறை செயலராக இருந்து வந்தார்.

தற்போது நிதித்துறை செயலராக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை மத்திய அரசு நியமனக்குழு பிறப்பித்தது.

Advertisement