கவன சிதறல் இன்றி தேர்வு எழுத வீடு வீடாக இறையன்பு அறிவுரை

கண்ணகிநகர், கண்ணகிநகர் அரசு மேல்நிலை பள்ளியில், மாணவர்கள் படிப்பை கைவிடாமல் தேர்வு எழுதுவதை உறுதி செய்ய, முதல் தலைமுறை கற்றல் மையம் முடிவு செய்தது.

இதற்காக, பள்ளியில் நடைபெறும் மாலை நேர சிறப்பு வகுப்பு நேரத்தில், சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

இந்நிலையில், தேர்வு எழுத உள்ள மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்காக, முன்னாள் தலைமை செயலர் இறையன்பு, நேற்று முன்தினம், மாணவ - மாணவியரின் வீடுகளை தேடிச் சென்றார்.

அவர்களுக்கு இனிப்பு வழங்கினார். படிப்பு குறித்து விசாரித்தார். உடல் நலம், மன நலம் குறித்து கேட்டறிந்தார்.

பின், அச்சம் நீங்கி, கவனச்சிதறல் இல்லாமல் தேர்வு எழுத வேண்டும் என, மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். உடல் உபாதை உள்ளதாக கூறிய மாணவர்களின், மருத்துவ சிகிச்சை பெற உதவுவதாக அவர் உறுதி அளித்தார்.

Advertisement