'டிரான்ஸ்பர்' வாங்கி தருவதாக ரூ.51 லட்சம் மோசடி: இருவர் கைது

சென்னை, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 38; மீன்வளத்துறையில் பணியாற்றி வருகிறார்.

கடலுாரில் ஆசிரியையாக பணியாற்றி வரும் அவரது மனைவிக்கு, பணியிட மாறுதல் வாங்கித் தருவதாக கூறி, துாத்துக்குடியைச் சேர்ந்த நாகராஜன், 32, கணேசன், 67, முத்துசாமி, 45, ஆகிய மூவரும், 51 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளனர்.

ஆனால், பணியிட மாறுதல் வாங்கி தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் அலைக்கழித்து வந்துள்ளனர். இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஜெயச்சந்திரன் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட முத்துசாமியை, கடந்தாண்டு நவ., 12ம் தேதி கைது செய்தனர்.

தலைமறைவாக இருந்த நாகராஜன், கணேசன் ஆகியோரை, நேற்று ஆய்வாளர் ராமசாமி தலைமையிலான மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Advertisement