மீண்டும் நிழற்பந்தல் அமைச்சர் உறுதி

சென்னை, சென்னையில் அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க, பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.

வெயில் தாக்கத்தில் இருந்து வாகன ஓட்டிகளை காக்க, சாலை சிக்னல்களில் மாநகராட்சி சார்பில், பசுமை நிழற்பந்தல் அமைக்கப்பட்டது. இந்தாண்டும் அமைக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement