முப்படையினர் கிளப்பில் ரூ.77.50 கோடி ஊழல்
மும்பை,மும்பையில் முப்படையினருக்காக நடத்தப்படும் கிளப்பில், 77.50 கோடி ரூபாய் முறைகேடு நடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மஹாராஷ்டிராவின் மும்பை, கொலாபா பகுதியில் உள்ள கடற்படை நகரில், முப்படையினருக்கான பிரமாண்ட பொழுதுபோக்கு கிளப் உள்ளது. 97 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இந்த கிளப்பில், உணவு விடுதி, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் உண்டு. ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் பணியாற்றுவோருக்கான இந்த கிளப்பில், 77.50 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மேற்கு மண்டல கடற்படை தலைமையகம் சார்பாக, கடற்படை கேப்டன் அளித்த புகாரின் அடிப்படையில், மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். முறைகேடு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆடிட்டரை வைத்து, கணக்குகளை தணிக்கை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராணுவத் துறை செய்தித் தொடர்பு அதிகாரி கூறுகையில், 'சில மாதங்களுக்கு முன் வழக்கமான தணிக்கையின்போது, கணக்கில் முரண்பாடு இருப்பதை கிளப்பின் செயலர் கண்டறிந்தார்.
'இதையடுத்து, தனியாக ஆடிட்டரை நியமித்து தணிக்கை செய்யப்பட்டது. நிதி கணக்குகளையும் கிளப் நிர்வாகம் ஆய்வு செய்தது. அப்போது இந்த முறைகேடு நடந்தது தெரியவந்தது' என்றார்.
மேலும்
-
பிளாஸ்டிக்கில் வேக வைக்கப்படும் இட்லியால் ஆபத்து! புற்றுநோய் பரவுவதாக கர்நாடக அரசு எச்சரிக்கை
-
ஒற்றுமையின் மகாயாகம் கும்பமேளா: மோடி அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் வருந்துவதாகவும் உருக்கம்
-
பேரீச்சம் பழத்துக்குள் தங்கம் கடத்தி வந்த நபர் சிக்கினார்
-
திறமையான இந்திய மாணவர்கள் வேண்டுமா? அமெரிக்க நிறுவனங்களுக்கு டிரம்ப் யோசனை
-
ஹிந்தி திணிப்பு குற்றச்சாட்டு ராகுலுக்கு அமைச்சர் கேள்வி
-
அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான சூறை