படுக்கையறையில் தீ: 'ஏசி' மின்கசிவு காரணமா?

அவிநாசி:திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே சேவூர் வி.ஐ.பி., நகரில் வசிப்பவர் கோவிந்தசாமி, 53; எலாஸ்டிக் கம்பெனி உரிமையாளர். மனைவி, மகன், மருமகளுடன் வசிக்கிறார்.

நேற்று காலை இவரது வீட்டின் மேல் தளத்தின் 'பெட் ரூமில்' தீப்பற்றி எரிந்துள்ளது. மர அலமாரி, கட்டில், பீரோ, டேபிள், சேர் ஆகியவை மளமளவென தீப்பிடித்து எரிந்தன. அவிநாசி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

ஏசி சாதனம் ஆன் செய்யப்பட்டிருந்ததால், மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்தில், 'டிவி', பீரோவில் வைக்கப்பட்டிருந்த 55,000 ரூபாய் ரொக்கம், தங்க செயின் என, 4 லட்சம் ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதமாகின.

Advertisement