ராஜஸ்தானில் காங்., நடத்திய மாதிரி 'சபை'

ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சட்ட சபையில் சமீபத்தில் பேசிய அமைச்சர் அவினாஷ் கெலாட், முன்னாள் பிரதமர் இந்திரா குறித்து அவதுாறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதை கண்டித்து, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்து சபையை புறக்கணித்து வருகின்றனர்.

சிக்கலை தீர்க்கும் வகையில், மூன்று நாட்களாக, காங்., - எம்.எல்.ஏ.,க்களுடன் சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் ஜோகராம் படேல் பேச்சு நடத்தினார்.

எனினும், பிரச்னை தீர்ந்தபாடில்லை; நேற்றும் சிக்கல் தொடர்ந்தது.

சட்டசபைக்கு வெளியே நேற்று கூடிய காங்., - எம்.எல்.ஏ.,க்கள் மாதிரி சட்டசபை கூட்டத்தை நடத்தினர்.

அதில் சிலர், பா.ஜ., அமைச்சர்கள் போலவும், சபாநாயகர் போலவும் பேசி, சிரிக்க வைத்தனர்.

Advertisement