சேதமான ஆர்.ஐ., அலுவலக கட்டடம் இடித்து அகற்றி புதியதாக கட்ட கோரிக்கை

படப்பை:காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பெரியார் நகரில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு முதியோர் உதவித்தொகை மற்றும் அரசின் பிற நலத்திட்டங்களின் கீழ் விண்ணபிக்கவும், சான்றிதழ்கள் சரிபார்கவும் ஏராளமான மக்கள் சென்று வந்தனர்.
கடந்த 2021ம் ஆண்டு புயலின் போது மரக்கிளைகள் உடைந்து விழுந்ததில் இந்த கட்டடம் சேதமானது.
இதனால், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் படப்பை கங்கைஅம்மன் கோவில் அருகே உள்ள மகளிர் சுயஉதவி குழு கட்டடத்திற்கு, மாற்றப்பட்டது.
நான்கு ஆண்டுகளாகியும் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சீரமைக்கப்படவில்லை. இதனால், மகளிர் சுய உதவி குழு கட்டடத்திலேயே வருவாய் ஆய்வாளர் அலுவலகம் தற்போது வரை இயங்கி வருகிறது.
இதனால், மகளிர் குழுவினர் இந்த கட்டடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, படப்பை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தின் பழைய கட்டடத்தை இடித்து அகற்றி அங்கு புதிய கட்டடம் கட்டி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.
மேலும்
-
பொள்ளாச்சி டூ சென்னைக்கு ஆம்னி பஸ் ஓட்டும் பெண்; அதீத ஆர்வத்தால் டிரைவரான ஆசிரியை
-
பிளாஸ்டிக்கில் வேக வைக்கப்படும் இட்லியால் ஆபத்து! புற்றுநோய் பரவுவதாக கர்நாடக அரசு எச்சரிக்கை
-
ஒற்றுமையின் மகாயாகம் கும்பமேளா: மோடி அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் வருந்துவதாகவும் உருக்கம்
-
பேரீச்சம் பழத்துக்குள் தங்கம் கடத்தி வந்த நபர் சிக்கினார்
-
திறமையான இந்திய மாணவர்கள் வேண்டுமா? அமெரிக்க நிறுவனங்களுக்கு டிரம்ப் யோசனை
-
ஹிந்தி திணிப்பு குற்றச்சாட்டு ராகுலுக்கு அமைச்சர் கேள்வி