பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் 'ஜிம்' உரிமையாளருக்கு 'காப்பு'
கும்பகோணம்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த 31 வயது பட்டதாரி பெண் விவாகரத்து பெற்று பெற்றோருடன் வசிக்கிறார். கும்பகோணம் மகாமக குளம் அருகே, 'மசில் பேக்டரி' ஜிம் உரிமையாளர் பத்மகுமரன், 27, உடன் பழக்கம் ஏற்பட்டது.
இளம்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, 38 லட்சம் ரூபாயை தொழிலுக்காக வாங்கியுள்ளார். மேலும், பெண்ணிடம் பலமுறை உடலுறவு கொண்டதால், அவர் கர்ப்பமானார். கடந்த ஆண்டு அக்டோபரில் பத்மகுமரன் அந்த பெண்ணிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட இளம்பெண், கும்பகோணம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். பெண்ணிடம் வாங்கிய 38 லட்சம் ரூபாயை பத்மகுமரன் திருப்பிக் கொடுத்தார். மேலும், திருமணம் செய்வதாகவும் உறுதியளித்தார்.
பிப்., 23ம் தேதி, சுவாமிமலை முருகன் கோவிலுக்கு பெண்ணை வரவழைத்த பத்மகுமரன், கர்ப்பத்தை கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் மனமுடைந்த பெண் தற்கொலைக்கு முயன்றார். திருவிடைமருதுார் மகளிர் போலீசார், நேற்று முன்தினம் பத்மகுமரனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
பிரதமரின் பட்டப்படிப்பு சான்றிதழ்: கோர்ட்டில் காட்ட பல்கலை தயார்
-
பொள்ளாச்சி டூ சென்னைக்கு ஆம்னி பஸ் ஓட்டும் பெண்; அதீத ஆர்வத்தால் டிரைவரான ஆசிரியை
-
பிளாஸ்டிக்கில் வேக வைக்கப்படும் இட்லியால் ஆபத்து! புற்றுநோய் பரவுவதாக கர்நாடக அரசு எச்சரிக்கை
-
ஒற்றுமையின் மகாயாகம் கும்பமேளா: மோடி அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் வருந்துவதாகவும் உருக்கம்
-
பேரீச்சம் பழத்துக்குள் தங்கம் கடத்தி வந்த நபர் சிக்கினார்
-
திறமையான இந்திய மாணவர்கள் வேண்டுமா? அமெரிக்க நிறுவனங்களுக்கு டிரம்ப் யோசனை