தடுப்பில்லாத சாலையோர பள்ளத்தால் அக்கமாபுரத்தில் விபத்து அபாயம்

அக்கமாபுரம்,:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில், அக்கமாபுரம் கிராமத்தில் இருந்து, ஏரிக்கரை வழியாக, எடையார்பாக்கம் கிராமத்திற்கு செல்லும், 2.5 கி.மீ., ஒன்றிய சாலை உள்ளது.

முதல்வரின் சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ், 2022-- 23ம் ஆண்டு ஒரு கோடி ரூபாய் செலவில் புதிதாக போடப்பட்டு உள்ளது. இந்த பிரதான சாலை ஓரம் திறந்தவெளி குளம் உள்ளது.

இந்த குளத்திற்கு போதிய தடுப்பு இல்லை. மேலும், சாலை ஓர குளக்கரையின் ஓரம் சீமைக்கருவேல மரங்கள் புதர் மண்டிக் காணப்படுகிறது.

அந்த சாலை வழியாக பயணம் செய்வோரின் கண்களை பதம் பார்க்கும் அளவிற்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

மேலும், எதிர் எதிரே வாகனங்கள் வரும் போது, ஒரு வாகனத்திற்கு மற்றொரு வாகனம் வழி விட்டு ஒதுங்கும் போது, சாலை ஓர பள்ளத்தில் கவிழும் அபாயம் உள்ளது.

எனவே, அக்கமாபுரம்-- எடையார்பாக்கம் சாலை ஓரம் இருக்கும் குளத்திற்கு தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement