சிவராத்திரி விழா

உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட சீத்தாவரத்தில் ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நீலாவதி அன்னை உடனுறை நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில்,

சிவராத்திரி விழாவையொட்டி நேற்று முன்தினம் பால்குடம் ஊர்வலம் நடந்தது.

மாலை பிரதோஷ வழிபாடும், இரவு 10:00 மணி முதல், அதிகாலை வரை நான்கு கால சிவ பூஜையும் நடந்தது.

இதேபோன்று, திருமுக்கூடல் ஆனந்தவல்லி உடனுறை ஆதிபுரீஸ்வரர் கோவிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அதை தொடர்ந்து பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

சீட்டணஞ்சேரி, சிவகாம சுந்தரி உடனுறை காலீஸ்வரர் கோவிலில், இரவு 8:00 மணிக்கு மூலவருக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் மஹா சிவராத்திரி சிறப்பு அபிஷேகம் தொடங்கப்பபட்டு அதிகாலை வரை நான்கு கால பூஜை நடைபெற்றது.

சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபட்டனர்.

Advertisement