தலை துண்டித்து மீனவரை கொன்ற இருவர் சிக்கினர்

மணமேல்குடி:தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீனவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே பத்தக்காடை சேர்ந்த சேசுராஜ் என்பவருக்கு, அப்பகுதியில் தென்னை தோப்பு உள்ளது. அங்கு, நேற்று அதிகாலை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உடல் கிடந்துள்ளது.

மணமேல்குடி போலீசார் தலை இல்லாத அந்த உடலை மீட்டு விசாரித்தனர். கொலை செய்யப்பட்டவர், மணமேல்குடி அருகே பொன்னகரம் மீனவர் சத்தியநாராயணன், 45, என, உறுதி செய்தனர்.

மேலும், உடல் கைப்பற்றப்பட்ட இடத்தில் இருந்து சிறிது துாரத்தில் புதருக்குள் தலையை கண்டுபிடித்தனர். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அப்பகுதி ஆனந்த், 50, நாடிமுத்து, 36, ஆகிய இருவரும் முன்விரோதம் காரணமாக, சத்தியநாராயணனின் தலையை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement