முதியவர், சிறுவனுக்கு 'காப்பு'

சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை சேர்ந்த கிருஷ்ணன், 68, மற்றும், 15 வயது சிறுவன். இருவரும், தாயின்றி, தந்தை பராமரிப்பில் வளரும், ஏழாம் வகுப்பு படிக்கும், 12 வயது மாணவிக்கு, சில நாட்களாக தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து, மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.


பாதிக்கப்பட்ட மாணவி பள்ளி தலைமை ஆசிரியரிடமும், சைல்டு ஹெல்ப் லைனுக்கும் தகவல் தெரிவித்தார். அலுவலர்கள் மாணவியிடம் விசாரித்து, சோளிங்கர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோவில் வழக்கு பதிந்து, கிருஷ்ணன் மற்றும், 15 வயது சிறுவனை நேற்று கைது செய்தனர்.

Advertisement