பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்க எதிர்பார்ப்பு
விருதுநகர்:பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்யாமல் இருந்தவர்களுக்கு வழங்கபட்ட கால அவசாகம் 2024 டிச., 31ல் முடிந்தது. இதில் விடுபட்டவர்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
பிறப்பு சான்றிதழில் குழந்தை பெயரை பதிவு செய்தால் மட்டுமே முழுமையான சான்றிதழாக கருத்தப்படும். பள்ளியில் சேருவதற்கும், வாக்காளர், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், விசா உரிமம், வெளிநாட்டில் குடியுரிமை பெற பிறப்பு சான்றிதழ் முக்கிய ஆவணமாகும்.
இந்த பிறப்பு சான்றிதழில் குழந்தை பெயரை பதிவு செய்யாமல் இருந்தால் பிறந்த நாளில் இருந்து 12 மாதங்களுக்குள் பெற்றோர், காப்பாளர் எழுத்து பூர்வமாக உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் கொடுத்து கட்டணமின்றி பெயரை பதிவு செய்து கொள்ள முடியும். ஓராண்டிற்கும் மேல் 15 ஆண்டிற்குள் பெயரை பதிவு செய்யாமல் இருந்தால் ரூ. 200 தாமத கட்டணம் செலுத்தி பதிவு செய்யலாம்.
மேலும் 2000 ஜன., 1க்கு முன் பிறந்து பெயர்கள் இல்லாமல் சான்றிதழ் பெற்றவர்கள் பெயரை சேர்த்து கொள்ள 2019 டிச., 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதற்காக பள்ளி, ஆதார் சான்றிதழ், ரேஷன் கார்டு நகல் கொடுத்து அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகத்தில் ரூ.200 தாமத கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்பட்டது.
இப்பணிகள் முழுமையாக நிறைவு பெறாததால் அனைத்து மாநிலங்களுக்கும் 2024 டிச., 31 வரை கால அவகாசம் மத்திய அரசால் வழங்கப்பட்டது. இதுவரை மூன்று முறை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அந்தந்த பகுதிகளில் போதிய விழிப்புணர்வு வழங்கப்படாததால் பலரும் சான்றிதழில் பெயர் சேர்க்காமல் உள்ளனர். பிறப்பு சான்றிதழில் பெயரை பதிவு செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
மேலும்
-
பாரதிதாசன் கல்லுாரியில் சிறப்பு சொற்பொழிவு
-
தேசிய தொழில் நுட்ப கழகத்தில் ரூ.32 கோடியில் புதிய கட்டடங்கள் மத்திய இணை அமைச்சர் திறந்து வைப்பு
-
திருநள்ளாரில் சிவராத்திரி விழா தங்க ரிஷப வாகனத்தில் சாமி வீதியுலா
-
காமராஜர் அரசு கல்லுாரியில் வரலாற்று தடங்கள் ஆய்வு கருத்தரங்கம்
-
போலீஸ் துறையில் 7 நாய்குட்டிகள்
-
ரத்தக்கசிவு நோய்களில் நோய் எதிர்ப்பு சிகிச்சை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி