தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

இடையகோட்டை:திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை அருகே வலையபட்டியிலுள்ள மகாலட்சுமி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வலையபட்டியில் ராயர் குலவம்சம் குரும்பாகவுண்டர் இனமக்களின் குலதெய்வமான மகாலட்சுமி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரி விழா 4 நாட்கள் கொண்டாடப்படும்.
இரண்டாம் நாளான நேற்று பரம்பரையாளர்கள் தலையில் முதல் தேங்காய் உடைத்து வேண்டிய வரம் கேட்பவர்களுக்கும் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் விழா நடந்தது. பூசாரி பூச்சப்பன் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தார். 50 க்கும் மேற்பட்டவர்களுக்கு தலையில் தேங்காய் உடைக்கப்பட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வில்லியனுாரில் மும்பை மாணவர்களுக்கு சுடுமண் சிற்பம் செய்வதற்கு பயிற்சி
-
ஷோரூமில் புதிய காரை எடுத்தபோது சாலையில் பாய்ந்து கவிழ்ந்து விபத்து மாணவி, வாலிபர் படுகாயம்
-
வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை
-
பாரதிதாசன் கல்லுாரியில் சிறப்பு சொற்பொழிவு
-
போக்குவரத்து விதிமீறலில் நடவடிக்கை: 80,496 ஓட்டுநர் உரிமங்கள் முடக்கம்
-
தேசிய தொழில் நுட்ப கழகத்தில் ரூ.32 கோடியில் புதிய கட்டடங்கள் மத்திய இணை அமைச்சர் திறந்து வைப்பு
Advertisement
Advertisement