அரசு பஸ் கண்டக்டரை கொலை செய்த காவலாளிக்கு ஆயுள்

தேனி:அரசு பஸ் கண்டக்டரை கொலை செய்த வழக்கில் தோட்ட காவலாளிக்கு ஆயுள் தண்டனை, ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து தேனி முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேனி கோட்டூர் ஆலமரத்தெரு ராஜேஷ்கண்ணன், உசிலம்பட்டி அரசு பஸ் டிப்போவில் கண்டக்டராக பணிபுரிந்தார். மனைவி மணிமேகலை. இவர்களுக்கு சொந்தமான நிலம் கோட்டூரில் இருந்து சமத்துவபுரம் செல்லும் ரோட்டில் இருந்தது.

இந்த நிலத்திற்கு அருகே இருந்த நிலத்தில் மணிமேகலையின் உறவினர் மலைச்சாமி காவலாளியாக பணிபுரிந்தார். மணிமேகலை மலைச்சாமியுடன் தொடர்பில் இருந்தார். இதனை உறவினர்கள் கண்டித்தனர்.

2021 பிப்.,8 இரவு தோட்டத்தில் இருந்த மாட்டு கொட்டகையில் ராஜேஷ் கண்ணன் கொலை செய்யப்பட்டார். அவரின் சகோதரர் கதிரவன் புகாரில் வீரபாண்டி போலீசார் மலைச்சாமி, மணிமேகலையை 2021 பிப்.,9ல் கைது செய்தனர். இந்த வழக்கு தேனி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. அரசு வழக்கறிஞர் பாஸ்கரன் ஆஜரானார்.

நேற்று மலைச்சாமிக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தீர்ப்பளித்தார். மணிமேகலை இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

Advertisement