பராமரிப்பு இல்லாத ஊருணி கால்வாய்

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், மேலப்பூடி ஊராட்சிக்கு உட்பட்டது சொரக்காய்பேட்டை. சொரக்காய்பேட்டை கிராமத்தை ஒட்டி கொசஸ்தலை ஆறு பாய்வதால், நிலத்தடி நீர்மட்டம் சிறப்பாக உள்ளது. 10 அடி ஆழத்தில் நீர்மட்டம் நிலவுகிறது.

நீர்வளம் மிக்க இந்த கிராமத்தின் கிழக்கில், நலம்புரியம்மன் கோவில் எதிரே, மூன்று பக்கம் கரைகளை கொண்டு ஊருணி தண்ணீர் செல்லும் கால்வாய் பாய்கிறது. அருகில் பாயும் கொசஸ்தலை ஆறு வற்றினாலும், இந்த ஊருணி கால்வாயில் தண்ணீர் வற்றுவது இல்லை. தரைமட்டத்தில் இருந்து ஊற்றெடுத்து பாய்கிறது.

செடி, கொடிகள் வளர்ந்து பராமரிப்பு இல்லாத நீர்நிலை நாளுக்குநாள் துார்ந்து வருகிறது. நீர்நிலையை சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement