முதியவரை அடித்து கொன்ற மூவர் கைது

வேலுார்:பைக் ஹாரன் அடித்த தகராறில் முதியவரை அடித்துக் கொன்ற, மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

வேலுார் அடுத்த வேலப்பாடியை சேர்ந்தவர் வெங்கசேடன், 55. இவர், நேற்று காலை, 8:30 மணியளவில் கடைக்கு சென்று காய்கறிகள் வாங்கிக்கொண்டு பில்டர்பெட் சாலையில், டி.வி.எஸ்., -- எக்ஸ்.எல்., மொபட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அவருக்கு முன்பாக, டியோ பைக்கில் மூன்று வாலிபர்கள் சென்றனர். அப்போது, பின்னால் வந்த வெங்கடேசன் ஹாரன் அடித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள், வெங்கடேசனை சரமாரியாக தாக்கியதில், படுகாயமடைந்து மயங்கி விழுந்த வெங்கடேசன் உயிரிழந்தார்.

வேலுார் வடக்கு போலீசார், முதியவரை அடித்துக் கொன்ற, மக்கான் பகுதி பிரகாஷ், 20, தோட்டப்பாளையம் அஜய், 26, ஜவகர், 26, ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement