ரூ.1.22 கோடி தங்கம் பறிமுதல்

திருச்சி:ஐக்கிய அரபு எமிரேட்சின் ஷார்ஜாவில் இருந்து நேற்று திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணியரை, திருச்சி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அதில், சந்தேகத்துக்குரிய ஆண் பயணியை தனியே அழைத்துச் சோதனை நடத்திய போது அவர், 'ஐஸ் க்ரஸ்ஸர்' என்ற மின்னணு சாதனத்தில் மறைத்து, 1.395 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரிந்தது. அதன் மதிப்பு, 1.22 கோடி ரூபாய்.

கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், பயணியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement