விவசாயிகள் கொலையா போலீசார் விசாரணை

கடமலைக்குண்டு:தேனி மாவட்டம் வருசநாடு அருகே வனப்பகுதியையொட்டிய விவசாய நிலத்தில் 2 விவசாயிகள் பலத்த காயங்களுடன் இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

வருஷநாடு தங்கம்மாள்புரம் மணிகண்டன் 45. அப்பகுதி கருப்பையா 55. இவர்கள் கரடி தாக்கியதால் இறந்ததாக தகவல் பரவியது. ஆனால் இருவரின் உடலில் பல இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தன. மேலும், 'அப்பகுதியில் கரடி வந்து சென்றதற்கான தடயங்கள் இல்லை.' என, வனத்துறை தெரிவித்துள்ளனர்.

கருப்பையா மகன் சந்திரசேகரன் தந்தை இறப்பில் மர்மம் இருப்பதாக எஸ்.பி.,யிடம் புகார் மனு அளித்தார். அதில், 'தனது தந்தை கருப்பையா, அவரது நண்பர் மணிகண்டன் ஆகியோர் பிப்.25ல் கோவில்பாறைக்கு அருகே உள்ள புஞ்சை தோட்டத்திற்கு சென்றனர்.

அன்று மாலை வரை அவர்கள் வீட்டிற்கு வர கால தாமதம் ஆனது. மொபைல் போனிற்கு அழைத்து தொடர்பு கொண்டனர். பதில் அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அவர்களை தோட்டத்திற்கு தேடி சென்றனர். கருப்பையாவின் நண்பர் மணிகண்டன் உடலில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். பதட்டத்துடன் கருப்பையாவை தேடினோம்.

அவரது இலவம் தோட்டத்தில் உடலில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். அப்பகுதியில் சம்பந்தம் இல்லாத மொபைல் போன் மற்றும் கிடந்துள்ளது. வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தவர்கள் இறப்பில் சந்தேகம் இருப்பதால் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement