திருச்சியில் ரூ.1.22 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்; கடத்தியது 'குருவி'யா என விசாரணை

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் 1.22 கோடி ரூபாய் மதிப்பிலான 1.39 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட பயணியை கைது செய்து நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கடத்தல் குருவியா என விசாரிக்கின்றனர்.
சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு பெருமளவு தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்படி, திருச்சி விமான நிலையத்தில் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பயணிகள் ஒருவரது நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருந்தது. சோதனையில், 1.22 கோடி ரூபாய் மதிப்பிலான 1.39 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக, கடத்தலில் ஈடுபட்ட பயணியை கைது செய்து நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் சார்ஜாவில் இருந்து ஐஸ் கிரசர் இயந்திரத்தில் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்தது விசாரணையில் அம்பலம் ஆனது. கடத்தலுக்கு முக்கிய தலைவனாக உள்ளவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

மேலும்
-
இனி 10% தள்ளுபடி காகித பயணச்சீட்டு இல்லை! சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
-
பரத நாட்டியத்தை உயிர்ப்பித்த ருக்மணி தேவி
-
தமிழகத்தை காக்கும் அரண்: முதல்வர் ஸ்டாலினுக்கு கமல் வாழ்த்து
-
உத்தரகண்டில் பனிச்சரிவில் சிக்கிய 47 ஊழியர்கள்; மீட்பு பணிகள் தீவிரம்
-
பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய கமிஷன் தலைவர் சந்திப்பு
-
நீலகிரியில் மன்னர் பழசி ராஜாவின் குகை; சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி!