கருவில் குழந்தை பாலினத்தை கண்டறிந்த விவகாரம்; அரசு டாக்டர் உட்பட 9 பேர் சஸ்பெண்ட்

9


சேலம்: சேலத்தில் கருவின் பாலினத்தை கண்டறிந்த விவகாரத்தில் அரசு டாக்டர், நர்ஸ்கள் உட்பட 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


சேலம் வீராணம் பகுதியில் உள்ள பசுபதி ஸ்கேன் சென்டரில், கருவின் பாலினத்தை விதி மீறி கண்டறிந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வில் அம்பலமானது. குழந்தை பாலினம் தெரிவிக்க தலா ரூ.15 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது. புகாரின்பேரில் ஸ்கேன் சென்டரில் மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.


இந்த விவகாரத்தில் அரசு டாக்டர் முத்தமிழ், நர்ஸ்கள் உட்பட 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்த அதிகாரிகள், இயந்திரங்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement