பார்க் கல்லூரி சார்பில் மகளிர் தினம் சிறப்பு

கோவை; பார்க் கல்வி குழுமத்தின் சார்பில், பெண்களை கவுரவிக்கும் வகையில், 'ஷீ லீட்ஸ்' என்ற பெயரில் 800 சுய உதவிக்குழு உறுப்பினர்கள், தொண்டு நிறுவனங்களின் பெண் உறுப்பினர்கள், பார்க் குழுமத்தை சேர்ந்த ஆயிரம், மாணவியர் மற்றும் பெண் ஆசிரியர்களை இணைத்து, மகளிர் தினம் பிரம்மாண்டமாக நடந்தது.

பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் அனுஷா ரவி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இந்தியாவிற்கான செஷெல்ஸ் நாட்டின், உயர் ஆணையர் ஹரிசோவா லலாட்டியானா அக்கோச்சே, கோவை கவுமார பிரஷாந்தி அகாடமி நிறுவனர் மற்றும் இயக்குனர் தீபா ஆகியோர், விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். பெண்களின் சம உரிமைக்காக சிறப்பாக செயல்படும், 30 பெண் தலைவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

தொழில் முனைவு யோசனை முன்வைப்பு போட்டியின் இறுதி சுற்றில், வெற்றி பெற்ற மூன்று தொழில்முனை வோர் பெண்கள் மற்றும் எட்டு தொழில் முனைவோர் மாணவிகளுக்கு, சான்றிதழ், நினைவுப்பரிசு மற்றும் துவக்க முதலீடு வழங்கப்பட்டது.

Advertisement