டவுன் பஸ்களில் மகளிர் சுயஉதவி குழுவினர் இலவசமாக 'லக்கேஜ்' எடுத்து செல்ல நிபந்தனை

சென்னை: மகளிர் சுயஉதவி குழுவினர், டவுன் பஸ்களில் 25 கிலோ பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்ல, தமிழக அரசு நிபந்தனைகள் விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:



தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வழங்கிய மகளிர் சுயஉதவிக் குழு அடையாள அட்டை வைத்திருக்கும் பெண்கள், அரசு பஸ்களில், 25 கிலோ வரையிலான சுமையை, கட்டணமின்றி எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவர்


'ஏசி' பஸ்களை தவிர, மற்ற அனைத்து டவுன் பஸ்களிலும் செல்லலாம்

சாதாரண கட்டண புறநகர் பஸ்களிலும், சுயஉதவிக் குழு பெண் பயணியர், 25 கிலோ வரையிலான சுமையை, 100 கி.மீ., வரை கட்டணமின்றி எடுத்து செல்லலாம்


சுயஉதவிக் குழு பெண்கள் எடுத்து வரும் சுமையை, பஸ்களில் ஏற்ற, இறக்க, போதுமான நேரத்தை வழங்கி, பஸ்களை இயக்க வேண்டும்


அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதிக்கக் கூடாது


பஸ்களில் அதிக இடத்தை ஆக்கிரமித்து, மற்ற பயணியருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், பெரிய சுமையை அனுமதிக்க கூடாது


சக பயணியரை பாதிக்கும் ஈரமான சுமை; பயணியர் இல்லாத சுமை போன்றவற்றை பஸ்சில் அனுமதிக்க கூடாது

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement