நாகர்கோவில் கோவை ரயில் இன்ஜின் பழுது

எரியோடு : கோவையில் இருந்து ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை வழியே நாகர்கோவிலுக்கு தினமும் இயக்கப்படும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மதியம் 12:00 மணிக்கு திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டிற்கு வந்தது.


அப்போது ரயில் இன்ஜினில் பெல்ட் அறுந்ததால் எரியோடு ஸ்டேஷனில் மதியம் 12:22 மணிக்கு நிறுத்தப்பட்டது. மாற்று இன்ஜினை வரவழைத்து மதியம் 2:57 க்கு ரயில் புறப்பட்டது. எரியோட்டில் பயணிகள் உணவுக்காக பரிதவித்தனர்.

Advertisement