அசாமில் 30 கோடி ரூபாய் போதை மாத்திரை பறிமுதல்

குவஹாத்தி: வடகிழக்கு மாநிலமான அசாமின் கச்சார் மாவட்டத்தில் உள்ள காக்மாரா பகுதியில் போதை பொருள் அதிகம் பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு அந்த பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், சோதனை நடத்தினர்.

அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த நபரை போலீசார் சோதனை செய்ததில், அவரிடம் இருந்து, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'யாபா' என்ற தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Advertisement